தெய்வத்திருமகள்
I AM SAM STORY
தெய்வத்திருமகள் என்றொரு படம் சமீபத்தில் வெளிவந்து ஓடிகொண்டிருக்கிறது. அதில் விக்ரம் மன வளர்ச்சி இல்லாத மனிதனாக நடித்திருக்கிறார். மக்கள் அந்த படத்தினை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதன் இயக்குனர் விஜய் இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தின் பாதிப்பு என்று கூறி இருக்கிறார். எல்லாம் சரி படம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன குறை என்றால் இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பு 2001 ஆம் வருடமே வெளி வந்துவிட்டது. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் அதுதான் உண்மை.
2001 ஆம் வருடம் I AM SAM என்ற ஒரு ஆங்கில படம். அதில் Sean Penn கதாநாயகனாக நடித்து வெளி வந்த படம். தற்போது ஓடிகொண்டிருக்கும் தெய்வத்திருமகள் படத்திற்கும் அதன் ஆங்கில பதிப்பிற்கும் எந்த விதமான வித்தியாசமும் கிடையாது. ஒரே கதைதான். மன வளர்ச்சி இல்லாத ஒரு மனிதன் தன மகளை எவ்வாறு வளர்க்கிறான், அந்த மகளை எவ்வாறு பிரிய நேர்கிறது மகளுக்கு உரிமை கோரி நீதிமன்ற வழக்கு மற்றும் விசாரணை என்பதுதான். காட்சிக்கு காட்சி மற்றும் விக்ரமின் ஒப்பனை மற்றும் முக பாவனைகள் கூட ஆங்கில படத்தின் கதாநாயகன் போல்தான் இருக்கிறது.
நான் டைரக்டர் விஜயை குறை சொல்லவில்லை. காப்பி அடித்தாலும் திறமையாக செய்திருக்கிறார். ஆனால் அவர் என்ன செய்திருக்க வேண்டும். கூச்சப்படாமல் இந்த கதை ஆங்கிலப்படத்தின் தழுவல் (தழுவல் என்பதே ஏற்றுகொள்ள முடியாதது- நகல் என்பதுதான் பொருத்தமானது..!)என்று சொல்லி ஒரு நன்றியையாவது டைட்டில் கார்டில் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து ஏதோ தன்னுடைய சொந்த கற்பனை என்பது போல் சொல்வதைத்தான் ஏற்றுகொள்ள முடியவில்லை.
இந்த படம் சர்வதேச போட்டிக்கு செல்ல போகிறது என்று வேறு சொல்லிகொல்கிறார்கள். ஆனால் அது நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் ஒரிஜினல் கதைக்குத்தான் அங்கீகாரம் கிடைக்கும். காப்பி அடித்த கதைக்கு அங்கீகாரம் கிடைக்குமா, அப்படி என்றால் அந்த ஒரிஜினல் ஆங்கில படத்தின் டைரக்டர் இது என்னுடைய கதை என்று சொல்ல மாட்டாரா என்று எனக்கு தெரியவில்லை.
மேலும் இந்த் டைரக்டரின் முந்தைய படமான மதராசபட்டினம் படம் பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக டைட்டானிக் பட ஞாபகம் வந்திருக்கும். வராதர்வர்கள் அந்த படத்தின் பின்னணி இசையை கவனித்திருந்தால் கண்டிப்பாக அது தெரியும். ஆகா மிக அழகாக நகல எடுக்கும் திறமையான டைரக்டர் நம்ம விஜய்..!
தெய்வதிருமகள் படம் உண்மை சம்பவத்தின் பாதிப்பு என்று விஜய் சொன்னதை நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அது என்னவென்றால் அவர் I AM SAM படத்தினை DVD இல பார்த்த உண்மை சம்பவம் என்று நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்..!
நண்பர்களே உங்களுடைய கருத்து என்ன...?
தெய்வத்திருமகள் ஒரிஜினல்..!
தெய்வத்திருமகள் காப்பி..!
ஊஞ்சலில் லூசியும் அவள் அப்பாவும்
ஊஞ்சலில் நிலாவும் அவள் அப்பாவும்
செருப்பு கடையில் லூசியின் அப்பாவும் அவர் நண்பர்களும்
செருப்பு கடையில் நிலாவின் அப்பாவும் நண்பர்களும்
லூசியும் அவளின் அப்பா மற்றும் நண்பர்களும் பலூனை வாங்கிக்கொண்டு சாலையின் இடது புறம இருந்து வலது புறம செல்கிறார்கள்
நிலாவும் அவளின் அப்பா மற்றும் நண்பர்களும் பலூனை வாங்கிக்கொண்டு சாலையின் வலது புறம இருந்து இடது புறம செல்கிறார்கள்
லூசியின் அப்பா அவளை பார்க்க ஓடி வரும்போது படிக்கட்டில் கால தடுக்கி விழுகிறார்
நிலாவின் அப்பா அவளை பார்க்க ஓடி வரும்போது படிக்கட்டில் கால தடுக்கி விழுகிறார்
லூசியின் அப்பா கீழே விழுந்து விட்டார் ..!
நிலாவின் அப்பா கீழே விழுந்து விட்டார்..!
குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் கூட எனக்கு தென்படவில்லை. உங்களுக்கு ஏதும் தெரிகிறதா..?
வீடியோ பார்க்க
தெய்வத்திருமகளில் நிலாவிற்கு காலணி வாங்குவதற்கு கடைக்கு விக்ரம் தன் நண்பர்களுடன் சென்று பில்லுக்கு பணம் பற்றாமல், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்து விட்டு பலூன் வாங்கிக்கொண்டு அனைவரும் சாலையில் வலது புறம இருந்து இடது புறம் செல்கிறார்கள்.
I Am Sam இல் லூசிக்கு காலணி வாங்குவதற்கு கடைக்கு SEAN PENN தன் நண்பர்களுடன் சென்று பில்லுக்கு பணம் பற்றாமல், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்து விட்டு பலூன் வாங்கிக்கொண்டு அனைவரும் சாலையில் இடது புறம இருந்து வலது புறம் செல்கிறார்கள்.
I AM SAM STORY
Sam Dawson (Sean Penn), a man with a developmental disability, is the father of Lucy (Dakota Fanning), after her mother abandoned them. Despite his limitations, Sam is well-adjusted and has a supportive group of friends with developmental disabilities, as well as a kind,agoraphobic neighbor Annie (Dianne Wiest) who takes care of Lucy when Sam cannot. Though Sam provides a loving and caring environment for precocious Lucy, she soon surpasses his mental ability. Other children tease her for having a "retard" as a father, and she becomes too embarrassed to accept that she is more intellectually advanced than Sam. In preparation for a custody case, a social worker turns up at Lucy's birthday party and takes her away, allowing Sam two supervised visits per week.
On the advice of his friends, Sam approaches a high-powered lawyer, Rita Harrison (Michelle Pfeiffer), whose brusque manner, fast-paced schedule and difficult personal life have earned her a reputation as cold and unfeeling. In an attempt to prove to others that she isn't heartless, Rita surprisingly agrees to take on Sam's case pro bono. As they work together to secure Sam's parental rights, Sam unwittingly helps Rita with her family problems, including encouraging her to leave her philandering husband and repairing her fractious relationship with her son.
During the trial period, Lucy resides in a foster home with Randy Carpenter (Laura Dern), but tries to convince Sam to help her run away, and continually escapes in the middle of the night to go to Sam's apartment, whereupon he immediately returns her. At the trial, Sam breaks down after opposing counsel convinces him that he is not capable of being a father. Ultimately, the foster family who planned to adopt Lucy decide to return her to Sam, with an arrangement that Randy will help him raise her.
The final scene depicts a soccer game, refereed by Sam, in which Lucy participates as a player. In attendance are the foster family, Sam's friendship group, and a newly-single Rita with her son.
DEIVA THIRUMAGAL STORY
The story of the film is about a man with a developmental disability, who fights for his daughter's custody after the death of his wife. Krishna (Vikram) is a dim-witted with a maturity of a five-year-old, who has lost his wife. He works in a chocolate factory in Ooty and lives happily with his daughter Neela (Sara). She goes to a school, which is run by her grand father Rajendran (Sachin Khedkar), but she is not aware of the fact nor her grand father. At this juncture, there bonding gets a threat after his father-in-law Rajendran (Sachin Khedkar) came to know about the truth and drags him to the court for Neela's custody, which devastates his emotional balance.
Rajendran along with his second daughter Shwetha (Amala Paul) appoints lawyer Bashyam (Naseer) to handle the case. Though, it looks, there is a point in their argument that a retard could not bring up his daughter easily, yet their separation would not be justified because Rajendran himself is a father of two girls. However, Krishna accidentally meets Anuradha Ragunathan (Anushka Shetty) and narrates his story. Moved by his past, she decides to fight for him in the court. Bashyam, who has never lost a single case in his life, tries to win the case at any cost.
நண்பர்களே இப்போது சொல்லுங்கள் இது ஆங்கில படத்தின் தழுவலா இல்லை காப்பியா என்று..
Rajendran along with his second daughter Shwetha (Amala Paul) appoints lawyer Bashyam (Naseer) to handle the case. Though, it looks, there is a point in their argument that a retard could not bring up his daughter easily, yet their separation would not be justified because Rajendran himself is a father of two girls. However, Krishna accidentally meets Anuradha Ragunathan (Anushka Shetty) and narrates his story. Moved by his past, she decides to fight for him in the court. Bashyam, who has never lost a single case in his life, tries to win the case at any cost.
நண்பர்களே இப்போது சொல்லுங்கள் இது ஆங்கில படத்தின் தழுவலா இல்லை காப்பியா என்று..
No comments:
Post a Comment